‘பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை’ பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தகவல்
‘பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது’ என்று தமிழக பா.ஜ.க. மாநிலத்தலைவர் அண்ணாமலை சென்னையில் கூறினார்.
சென்னை,
முதல்-அமைச்சர் குறித்து அவதூறாக பேசியதற்காக தி.மு.க. தொடுத்த வழக்கு குறித்து, சென்னை தியாகராயநகரில் உள்ள தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மாநிலத்தலைவர் அண்ணாமலை நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
துபாய் நாட்டில் ரூ.6 ஆயிரத்து 100 கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்து ஆகி இருப்பதாக முதல்-அமைச்சர் கூறி உள்ளார். இதில் 70 சதவீதம் துபாயில் இருக்கும் கேரளாவை சேர்ந்த தொழில் அதிபர் யூசுப்அலி முதலீடு செய்து உள்ளார். எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி கேட்ட பிறகுதான், முதல்-அமைச்சர் குடும்பத்தினரின் துபாய் பயண செலவை தி.மு.க. ஏற்கும் என்று கூறுகின்றனர். இதனை முன்கூட்டியே கூறாததற்கு என்ன காரணம்? அரசு எப்போதும் வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டும்.
முதல்-அமைச்சர் குறித்து அவதூறாக பேசியதற்காக தி.மு.க. சார்பில் என் மீது தொடுக்கப்பட்ட வழக்கை நீதிமன்றத்தில் சந்திக்க வழிமேல் விழி வைத்து காத்திருக்கிறேன். அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களை மிரட்டி பணம் வாங்கியதாக ஆர்.எஸ்.பாரதி கூறி உள்ளார். சென்னை தியாகராயநகரில் உள்ள தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில்தான் இருக்கிறேன். ஆதாரத்துடன் தான் பேசி உள்ளேன். கைது செய்ய வேண்டும் என்று நினைத்தால் 6 மணி நேரத்திற்குள் கமலாலயத்தில் வந்து கைது செய்யுங்கள். அப்படி 6 மணி நேரத்தில் என்னை கைது செய்யவில்லை என்றால், நீங்கள் சொல்வது பொய் என்று தான் மக்கள் எடுத்து கொள்வார்கள்.
தொடர்ச்சியாக என் மீதும், பிரதமர் மீதும் அவதூறு பரப்புகிறார்கள். பொங்கல் தொகுப்பில் நடந்த ஊழல் குறித்து சுட்டி காண்பித்தும் இதுவரை என்ன நடவடிக்கை எடுத்தார்கள்?
முதல்-அமைச்சர் பதவி ஆசையில்லை
தமிழகத்தில் பா.ஜ.க. முதல்-அமைச்சரை உருவாக்கவே பணிக்கப்பட்டு உள்ளேன். மாறாக எனக்கு முதல்-அமைச்சர் பதவி மீது எந்த ஆசையும் இல்லை. முதல்-அமைச்சர் ஆவதற்கு நான் வரவில்லை. வேண்டும் என்றால் எழுதி தருகிறேன். பட்ஜெட் குறித்து நான் பேசியதற்கு எல்லாம் தெரிந்து கொண்டு வந்து பேச சொல்லுகிறார்கள். பட்ஜெட்டில் உள்ள குறைபாடுகளை சுட்டி காண்பித்தால் அண்ணாமலைக்கு தகுதி இல்லை என்கின்றனர். பி.இ. படித்து முடித்துவிட்டு, ஐ.ஐ.எம். கல்வி நிறுவனத்தில் எம்.பி.ஏ. படித்து, ஐ.பி.எஸ். அதிகாரியாக 9 ஆண்டுகள் பணியாற்றி உள்ளேன்.
நான் செய்த சாதனைகள் என்ன? பொதுமக்களிடம் எந்த அளவு மரியாதை வைத்திருந்தேன் என்று எல்லாம் இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். நான் வேலை பார்த்த எந்த நிறுவனமும் திவாலாகவில்லை. சொந்த கட்சி சின்னத்தில் நின்று தேர்தலை சந்திக்க முடியாத கட்சியினர் தி.மு.க.வின் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுவிட்டு தி.மு.க.வுக்கு வக்காலத்து வாங்கும் அரசியல் கட்சி தலைவர்கள் என்னை பற்றி பேச எந்த தகுதியும் இல்லை.
மத்திய அரசு உன்னிப்பாக கவனிக்கிறது
உக்ரைன்-ரஷியா நாடுகளுக்கு இடையே நடந்து வரும் போர் காரணமாக பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது. இதனை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. குறிப்பாக உணவு பொருட்களின் விலைகளை உயராமல் மத்திய அரசு தடுக்கும். எரிபொருட்களின் விலைகளை கட்டுப்படுத்த குறுகிய மற்றும் நீண்ட கால திட்டங்களை கொண்டுவர உள்ளது. அதற்கு பிறகு பெட்ரோல், டீசல் விலைகள் படிப்படியாக குறையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி, பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், சென்னை மண்டல தேர்தல் பொறுப்பாளர் கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.