தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நேற்றைவிட இன்று சற்று அதிகரிப்பு
தமிழகத்தில் நேற்று தினசரி கொரோனா பாதிப்பு 33- ஆக பதிவாகியிருந்த நிலையில், இன்று தொற்று பாதிப்பு 37 ஆக அதிகரித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது கட்டுக்குள் உள்ளது. கடந்த பல வாரங்களாகவே தொற்று பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இரட்டை இலக்க எண்களிலேயே தினசரி தொற்று பாதிப்பு பதிவாகி வருவது மக்களுக்கு ஆறுதலை கொடுத்துள்ளது.
இந்த நிலையில், இன்றைய கொரோனா பாதிப்பு நேற்றை ஒப்பிடுகையில் சற்று அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:
தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 64 பேர் குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 339 - ஆக குறைந்துள்ளது.
கொரோனா பாதிப்பால் புதிதாக உயிரிழப்பு எதுவும் இல்லை. சென்னையில் மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பைக் கண்டறிய 25,105 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.