அகில இந்திய குடிமைப்பணி முதல் நிலை தேர்வுக்கான பயிற்சி வகுப்பு அமைச்சர் தொடங்கிவைத்தார்
அகில இந்திய குடிமைப்பணி முதல் நிலை தேர்வுக்கான பயிற்சி வகுப்பு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கிவைத்தார்.
சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
சென்னை, ராஜா அண்ணாமலைபுரம், அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில் நேற்று நடைபெற்ற 2022-ம் ஆண்டிற்கான முதல் நிலை தேர்விற்கான பயிற்சி வகுப்பினை நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார்.
மேலும், முதல் நிலை மற்றும் முதன்மைத் தேர்வுக்கான புவியியல் பாடப் புத்தகத்தை அவர் வெளியிட, அரசு தலைமைச் செயலாளர் மற்றும் பயிற்சித் துறை தலைவர் இறையன்பு பெற்றுக் கொண்டார். அப்போது, மனிதவள மேலாண்மைத்துறை அரசு செயலாளர் மைதிலி கே.ராஜேந்திரன் உடனிருந்தார்.
அகில இந்திய குடிமைப்பணி தேர்வுப் பயிற்சி மையத்தில் தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் நுழைவுத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள 165 நபர்கள் (முழு நேரம் மற்றும் பகுதி நேரம்) அகில இந்திய குடிமைப் பணிகள் முதல் நிலை தேர்வுக்கான பயிற்சியை பெற உள்ளனர். மேலும், காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கும் தற்போது சேர்க்கை நடைபெற்று வருகிறது.
முன்னதாக, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில், 75-வது சுதந்திர தின விழா பூங்காவை திறந்து வைத்தார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.