திடீரென அறுந்து விழுந்த ‘லிப்ட்’

முத்தியால்பேட்டையில் கட்டுமானப்பணியின் போது திடீரென் லிப்ட் அறுந்து விழுந்ததில் காண்டிராக்டர் உள்பட 2 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2022-03-28 18:18 GMT
புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதி விஸ்வநாதன் நகரில் மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக கட்டுமான பொருட்களை மேலே கொண்டு செல்ல லிப்ட் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 
இந்த கட்டிட காண்டிராக்டரான பா.ஜ.க. பிரமுகர் சிவக்குமார் (வயது 52), வேல்ராம்பேட்டை சேர்ந்த ஜெபஸ்டின் (31) ஆகியோர் இன்று கட்டிட பணிகளை பார்வையிட்டனர். பின்னர் லிப்ட் மூலம் கீழே இறங்கினர்.  அப்போது லிப்ட் தரைக்கு வந்த போது எதிர்பாராத விதமாக திடீரென்று அறுந்து விழுந்தது. இதில் சிவக்குமார் உள்பட 2 பேருக்கும் காயம் ஏற்பட்டது. அவர்கள் இருவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து முத்தியால்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்