ஆலங்குடி அருகே ரூ.12 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் - 4 பேர் கைது...!

ஆலங்குடி அருகே ரூ.12 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்த போலீசார் 4 பேரை கைது செய்துள்ளனர்

Update: 2022-03-27 03:30 GMT
ஆலங்குடி, 

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக மாவட்ட எஸ்.பி நிஷா பார்த்திபனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து எஸ்பி உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் ஆலங்குடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்பகுதியில் உள்ள மளிகை கடை, விடுதிகள், பழைய பிளாஸ்டிக் கடைகள் போன்றவற்றில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு பதுக்கி வைத்திருந்த 315 கிலோ எடை கொண்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார பறிமுதல் செய்தனர். மேலும், இத்தகைய பொருட்களை பதுக்கி வைத்திருந்த தங்கபாண்டியன்( 27)  அசர்கனி (25), ராஜா (42), அப்துல் ரஹ்மான் (27) ஆகியவர்களை போலீசார் கைது செய்தனர்.

இது தொடர்பாக போலீசார் கூறுகையில்,

ஆலங்குடி சுற்றுவட்டார பகுதியில் நடத்திய சோதனையில் சுமார் ரூ.12 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் தொடர்புடைய 4 பேரை போலீசார் தற்போது கைது  செய்துள்ளனர். இவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகின்றது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 

மேலும் செய்திகள்