மோட்டார் சைக்கிள் திருட்டு

அரியாங்குப்பத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2022-03-26 18:24 GMT
புதுவை அரியாங்குப்பம் ஒத்தை வீதியை சேர்ந்தவர் கலையரசன் (வயது28). தனியார் நிறுவன ஊழியர். சம்பவத்தன்று கலையரசன் தனது மோட்டார் சைக்கிளை இந்திரா காந்தி சிலை அருகே உள்ள வங்கி அருகே நிறுத்தி விட்டு சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்