பாரதி பூங்கா மீண்டும் திறப்பு

ஊழியர்கள் போராட்டம் முடிவுக்கு வந்துள்ள நிலையில் பாரதி பூங்கா மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

Update: 2022-03-26 16:48 GMT
ஊழியர்கள் போராட்டம் முடிவுக்கு வந்துள்ள நிலையில் பாரதி பூங்கா மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
போராட்டம் வாபஸ்
நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுக்கு அரசே நிதி ஒதுக்கி சம்பளம் வழங்கவேண்டும் என்று வலியுறுத்தி நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் கடந்த 21-ந்தேதி முதல் விடுப்பு எடுத்து தொடர் போராட்டம் நடத்தினார்கள். இதன் காரணமாக வரி வசூல் பணிகள் பாதிக்கப்பட்டன. நகராட்சி வசம் உள்ள பாரதி பூங்காவும் மூடப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.
இந்தநிலையில் போராட்டம் நடத்திய ஊழியர்கள் முதல்-அமைச்சர் ரங்கசாமியை நேற்று சந்தித்து பேசினார்கள். அப்போது அவர் ஊழியர்களின் கோரிக்கை தொடர்பாக செப்டம்பர் மாதம் பரிசீலிப்பதாக உறுதியளித்தார். இதைத்தொடர்ந்து ஊழியர்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
பாரதி பூங்கா திறப்பு
ஊழியர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து பாரதி பூங்கா இன்று மீண்டும் திறக்கப்பட்டது. பூங்காவை சீரமைக்கும் பணிகளையும் ஊழியர்கள் தொடங்கியுள்ளனர். 
மேலும் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் வருகையால் பூங்கா மீண்டும் களை கட்டியது. பெற்றோர்கள் வழக்கம்போல் பூங்காவுக்கு வந்து தங்கள் குழந்தைகளுக்கு மதிய உணவு ஊட்டினார்கள்.

மேலும் செய்திகள்