ஒப்பந்த அடிப்படையில் மின்துறையில் 42 இளநிலை பொறியாளர்கள் நியமனம் அதிகாரி தகவல்

புதுவை மின்துறையில் 42 இளநிலை பொறியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர்.

Update: 2022-03-26 15:12 GMT
புதுச்சேரி
புதுவை மின்துறையில் 42 இளநிலை பொறியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர்.

ஒப்பந்த அடிப்படையில்...

புதுவை மின்துறையை தனியார் மயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு தொழிலாளர்களும், பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்தநிலையில் மின்துறையில் காலியாக உள்ள 42 இளநிலை பொறியாளர் பதவிகளை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப மின்துறை கண்காணிப்பு பொறியாளரும், துறை தலைவருமான சண்முகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

என்ஜினீயரிங்-டிப்ளமோ

அதன்படி புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த பொதுப்பிரிவினர் 17, பொருளாதாரத்தில் பின்தங்கியோர் 4 பேர், இதர பிற்படுத்தப்பட்டோர் 14 பேர், தாழ்த்தப்பட்டோர் 7 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இவர்களுக்கு மாதந்தோறும் ரூ.33 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட உள்ளது.
இந்த பணிக்கு எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் டிப்ளமோ படிப்பில் எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் படித்து 3 ஆண்டு அனுபவம் மிக்கவர்களும் விண்ணப்பிக்கலாம்.

நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

இதற்கான வயதுவரம்பு, தேர்வுமுறை, விதிகள் ஆகியன குறித்த விவரங்களை திங்கட்கிழமை இணையதளத்தில் காணலாம். விண்ணப்பதாரர்கள் http://recruitment.py.gov.in என்ற இணையதளத்தில் ஏப்ரல் 18-ந்தேதி மாலை 5 மணிவரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
இணையதளத்தில் விண்ணப்பித்த நகலுடன், கல்வி சான்றிதழ், போட்டோ ஆகியவற்றை சுய ஒப்பத்துடன் புதுவை மின்துறை தலைமை அலுவலகத்தில் ஏப்ரல் 25-ந்தேதி மாலை 5 மணிக்குள் ஒப்படைக்கவேண்டும்.7
இளநிலை பொறியாளர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான தேர்வு விவரங்கள் பின்னர் அறிவிக்கப்பட உள்ளது.

மேலும் செய்திகள்