தமிழகத்தில் மேலும் குறைந்த கொரோனா பாதிப்பு...

தமிழகத்தில் தற்போது 418 பேர் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Update: 2022-03-26 14:42 GMT
சென்னை,

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை. 

இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் 38,025 பேர் உயிரிழந்துள்ளனர். அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 63 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் தற்போது 418 பேர் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

மேலும் செய்திகள்