தமிழக சட்டசபை ஏப்ரல் 6-ந் தேதி மீண்டும் கூடுகிறது சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
தமிழக சட்டசபை அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி மீண்டும் கூடுகிறது. அப்போது துறைரீதியாக மானிய கோரிக்கை குறித்து விவாதம் நடைபெறும்.
சென்னை,
தமிழக சட்டசபை கடந்த 18-ந் தேதி கூடியது.
அன்றையதினம் பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.
மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் 21-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. 24-ந் தேதி அமைச்சர்களின் பதிலுரைக்கு பின்னர் சட்டசபை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
ஏப்ரல் 6-ந் தேதி
இந்தநிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் மு.அப்பாவுநிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-
அடுத்த மாதம் ஏப்ரல் 6-ந் தேதியன்று காலை 10 மணிக்கு மீண்டும் சட்டமன்ற கூட்டத் தொடர் தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள சட்டமன்ற மண்டபத்தில் தொடங்க உள்ளது. அப்போது அரசுத் துறைகளுக்கான மானியக் கோரிக்கைகள் தொடங்கும்.
எந்தெந்த மானியக் கோரிக்கைகளை எந்தெந்த நாட்களில் எடுத்து விவாதிக்கலாம்? எத்தனை நாட்கள் அவையை நடத்தலாம்? என்பதை அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவெடுக்கும். இதற்காக அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் 30-ந் தேதி சபாநாயகர் தலைமையில் அவரது அறையில் காலை 11 மணிக்கு நடைபெறும்.
இடமாற்றம் நடக்குமா?
அனைத்து நாட்களிலும் கேள்வி, பதில் நேரம் உண்டு. கலைவாணர் அரங்கம் விசாலமாக உள்ளது. கொரோனா தொற்று பரவலை தவிர்க்க அந்த இடத்தை தேர்வு செய்திருந்தனர். அதைவிட இங்கு இடவசதி குறைவுதான். ஓமந்தூரார் வளாகத்தில் கட்டப்பட்டிருந்த சட்டசபைக்கு இடம் மாற்றம் நடக்குமா? என்று கேட்டால்,
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி, சட்டமன்றப் பேரவைக்காக கட்டிய அந்த இடத்தை உயர் சிறப்பு மருத்துவமனைக்காக மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மாற்றினார். அதன் பிறகு ஜெயலலிதாவும், முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் இந்த இடத்தில்தான் சட்டசபையை நடத்தினார்கள். அப்போது இதுபோன்ற கேள்விகளை அவர்களிடம் நீங்கள் கேட்டீர்களா? என்பது எனக்கு ஞாபகம் இல்லை.
ஆராய்ந்து முடிவு
முதல்-அமைச்சர் எந்த விஷயத்தையும் எடுத்தோம், கவிழ்த்தோம் என்று செய்பவரல்ல. ஒரு பிரச்சினையை எடுத்து வீம்பாக செயல்பட வேண்டும் என்ற நோக்கம் உள்ளவரல்ல. யாரையும் புகழ்ந்து பேசவிட்டு ரசித்துக் கேட்டுக் கொண்டிருப்பவர் அல்ல.
எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்யவிட்டு அதையும் ரசித்துக் கொண்டிருக்க மாட்டார். ஆரோக்கியமாக சட்டமன்றத்தில் என்ன தேவையோ அதை ஜனநாயக ரீதியில் பேசக்கூடிய முதல்-அமைச்சர் அவர்.
எனவே, நாம் கட்டிய கட்டிடத்தில் சட்டமன்ற கூட்டத் தொடரை நடத்த முடியவில்லை என்பதால், இதை முடித்துவிட்டு உடனே அங்கு சென்றுவிட வேண்டும் என்ற அந்த எண்ணமும் அவரிடம் இருக்காது. எதைச் செய்தாலும் ஆராய்ந்து சரியான முடிவை எடுப்பார்.
நிலுவையில் உள்ள மசோதா
நிதித்துறை அமைச்சர் பேசும்போது, கவர்னர் ஒப்புதலுக்காக 19 சட்ட மசோதாக்கள் நிலுவையில் உள்ளன என்று குறிப்பிட்டார். அவை என்னென்ன மசோதாக்கள் என்ற பட்டியலை அறிவிப்பேன். நீட் மசோதா பற்றியும் கேட்டுச் சொல்கிறேன்.
நீட் மசோதாவை உடனடியாக ஜனாதிபதிக்கு அனுப்புவதாக ஒரு சந்திப்பின்போது முதல்-அமைச்சரிடம் கவர்னர் சொன்னதாக ஊடகங்களில் செய்திகள் வந்தன. நல்லதே நடக்கும்.
வெளிநடப்பு செய்திருக்க வேண்டாம்
பட்ஜெட் மீது விவாதிக்கும் போது எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், தான் தொடர்ந்து பேசுவதாகவும், இறுதி நாளில் நிதித்துறை அமைச்சர் பதில் தெரிவிக்கலாம் என்று கூறிவிட்டு பேசினார். அதைத் தொடர்ந்து ஒன்றரை மணி நேரம் பேசினார்.
முதல்-அமைச்சரும் அதை ஏற்றுக் கொண்டு அந்தவாரே பதிலளிக்கலாம் என்று குறிப்பிட்டார். இறுதியில், அந்த அடிப்படையில்தான் சில முக்கிய பணியின் நிமித்தம் நிதித்துறை அமைச்சர் வெளியே சென்றார். அதை எனது கவனத்திற்கு தெரிவித்துவிட்டுதான் சென்றார்.
அமைச்சர் வெளியே போய்விட்டால் அந்த விவகாரம் அப்படியே போய்விட்டது என்றெல்லாம் இல்லை. அமைச்சரவை என்பது ஒரு கூட்டுப் பொறுப்பு. முதல்-அமைச்சர் உள்பட எல்லாருக்குமே அதற்கான பொறுப்பு உள்ளது. நிதித்துறை அமைச்சர் வெளியே சென்றாலும், முதல்-அமைச்சர், மற்ற அமைச்சர்கள் இருக்கும் போது இதில் குறை சொல்ல என்ன இருக்கிறது? அந்த காரணத்தைக் கூறி நேற்று அவர்கள் வெளிநடப்பு செய்திருக்க வேண்டாம் என்பது எனது கருத்து.
இவ்வாறு அவர் கூறினார்.