ஓசூரில் ரூ. 30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது...!

நிலத்தை அளவிடு செய்ய ரூ. 30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-03-25 15:00 GMT
ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பத்தலபள்ளி பகுதியை சேர்ந்தவர் ஹரிநாத். இவர் தனக்கு சொந்தமான நிலத்தை அளவிடு செய்ய அப்பகுதி சர்வேயர் வடிவேல் என்பவரை அணுகியுள்ளார். இந்த பணிக்காக வடிவேல் தனது புரோக்கர் தமீஸ் என்பவர் மூலம் ரூ.50 ஆயிரம்  கேட்டதாக கூறப்படுகிறது.

நீண்ட இழுபறிக்கு பின்னர் ரூ. 30 ஆயிரம் ஹரிநாத் வழங்க சம்மதம் தெரிவித்தார். மேலும் இது குறித்து கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கும் அவர் தகவல் தெரிவித்து உள்ளார்.

போலீசாரின் ஆலோசனைப்படி, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை வடிவேலின் வீட்டுக்கு சென்று ஹரிநாத் கொடுக்க சென்றார். அவரை பின் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரும் சென்றனர்.

அப்போது வீட்டில் இருந்த வடிவேலிடம் ஹரிநாத் பணத்தை கொடுத்தார். பணத்தை சர்வேயர் வடிவேல் வங்கியதும் மறைந்து நின்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக கைது செய்தனர். பின்னர் அவர் வீட்டில் சோதனை செய்த போலீசார் புரோக்கர் தமீசையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்