ரேசன் அரிசி கடத்திய மினி வேன் கவிழ்ந்து விபத்து...!
ஈரோடு அருகே ரேசன் அரிசி கடத்திய மினி வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அடுத்த கள்ளிப்பட்டி அருகே உள்ள தண்ணீர்பந்தல் என்ற இடத்தில் இன்று காலை 25 மூட்டை ரேசன் அரிசியுடன் மினி வேன் ஒன்று கவிழ்ந்து கிடந்துள்ளது.
இது குறித்து பங்களாப்புதூர் போலீசாருக்கு அப்பகுதியினர் தகவல் கொடுத்தனர். தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது, மினி வேனுடன் கவிழ்ந்து கிடந்த ரேசன் அரிசியை அடையாளம் தெரியாத நபர் கடத்தி வரும் போது மினி வேன் விபத்து உள்ளாகி உள்ளது. இதனால் வாகனத்தை ஓட்டி வந்தவர்கள் வேனை விட்டுவிட்டு தப்பியோடி உள்ளனர் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.