காவலர் தேர்வில் அசத்திய ஆட்டோ ஓட்டும் இளைஞர்! - குவியும் பாராட்டு

புதுச்சேரியில் நடந்து முடிந்த காவலர் தேர்வில் ஆட்டோ ஓட்டும் இளைஞர் ஒருவர் தனது விடா முயற்சியால் தேர்ச்சி பெற்றுள்ளார்.

Update: 2022-03-25 08:19 GMT
புதுச்சேரி,

புதுச்சேரி, ஜீவா நகரை சேர்ந்த கந்தன் (31) என்ற இளைஞர் சிறு வயதிலிருந்தே காவலராக வேண்டும் என்ற ஆசையில் இருந்து வந்துள்ளார். இவர் ஐ.டி.ஐ. படித்த நிலையில் குடும்ப வறுமை காரணமாக மேற்கொண்டு படிக்க முடியவில்லை. இதனால் கடந்த 2013ம் ஆண்டு முதல் ஆட்டோ ஓட்டும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.  இவருக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணமாகி 1 வயதில் குழந்தையும் உள்ளது.  

இந்நிலையில், புதுச்சேரியில் 10 ஆண்டுகளுக்கு பிறகு காவலர் தேர்வு தேதி அறிவிப்பு வெளியானது. இதற்காக ஆட்டோ ஓட்டிக்கொண்டே பயிற்சி செய்து வந்துள்ளார். தனது விடா முயற்சியால் தற்போது, காவலர் தேர்வில் தகுதி பெற்றுள்ளார். ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதை சக ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

மேலும் செய்திகள்