ராணிப்பேட்டையை சேர்ந்த 2 மாணவிகளுக்கு தடுப்பூசி போட்டுக்கொண்டதால் பாதிப்பா?
ராணிப்பேட்டையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 2 மாணவிகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது குறித்த ஆய்வறிக்கை டெல்லிக்கு அனுப்பப்பட்டு உள்ளதாக மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை,
சட்டசபையில் நேரமில்லா நேரத்தில் அ.தி.மு.க. கொறடா சு.ரவி ராணிப்பேட்டையில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட மாணவிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து அரசின் கவனத்தை ஈர்த்து பேசினார்.
இதற்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்து கூறியதாவது:-
தமிழகத்தில் இதுவரை 10 கோடியே 34 லட்சத்து 28 ஆயிரத்து 372 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்கின்றன. ராணிப்பேட்டை மாவட்டம், எத்திராஜ் அம்மாள் முதலியாண்டான் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் படித்து வரும் 17 வயது ஆர்.யோகலட்சுமி மற்றும் அதே பள்ளியில் படித்து வரும் 15 வயது, பி.பிரியதர்ஷினி ஆகியோர் கோவாக்சின் தடுப்பூசியினை செலுத்திக்கொண்டனர். தடுப்பூசி அளிக்கப்பட்டவுடன் எந்தவித பாதிப்பும் அவர்களுக்கு ஏற்படவில்லை.
சில நாட்கள் கழித்து, ஆர்.யோகலட்சுமி என்கின்ற மாணவிக்கு கண் பார்வை பிரச்சினை இருப்பதாக தெரிவித்ததன்பேரில், ஆஸ்பத்திரியிலும், வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியிலும், வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரியிலும், உயர் சிகிச்சை தேவைப்பட்டதால் எழும்பூர் அரசு கண் ஆஸ்பத்திரியிலும், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது ஆஸ்பத்திரியிலும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.
அதோடு பிரியதர்ஷினி என்கின்ற மாணவிக்கு உடல் பலவீனம் பிரச்சினை காரணமாக அதேபோல் தொடர் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.
மேற்கூறிய 2 மாணவிகள் மற்றும் அவர்கள் பெற்ற சிகிச்சைகள் குறித்து 12-ந்தேதி மாவட்ட மற்றும் மாநில அளவிலான தடுப்பூசிகளை செலுத்தியதற்கு பிறகு வரும் பின்விளைவுகளை கண்காணிக்கும் குழு கூடி அனைத்து மருத்துவ ஆவணங்களையும் பரிசீலித்தது.
தொடர் சிகிச்சை
அதன்பிறகு அவர்கள் அறிக்கை சமர்ப்பித்திருக்கிறார்கள். அப்படி சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் யோகலட்சுமி-க்கு தடுப்பூசி செலுத்தியதற்கு பிறகு ஏற்பட்ட பின்விளைவுகளுக்கும் தடுப்பூசி செலுத்தியதற்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும், பிரியதர்ஷினிக்கு வேறு நோயாக இருக்கலாம் என்ற நிலையில் தடுப்பூசி செலுத்தியதால் ஏற்பட்ட பாதிப்பா என அறிய இவ்வறிக்கையினை மேல் பரிசீலனைக்காக புதுடெல்லியில் உள்ள பின்விளைவுகளைக் கண்காணிக்கும் ஆய்வு மையத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளன.
எனவே, பாதிக்கப்பட்ட இருவருக்கும் சென்னை, ராஜீவ்காந்தி அரசு பொது ஆஸ்பத்திரியில் தொடர்ந்து உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ள செய்தி அறிந்ததும் முதல்-அமைச்சர் என்னையும், கதர்துறை அமைச்சரையும் மாணவிகளின் வீட்டிற்கு சென்று நிலைமையை பரிசீலித்து வாருங்கள் என்று கூறியிருக்கிறார். அடுத்த வாரம் நாங்கள் அங்கு செல்ல இருக்கிறோம். பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.