சென்னை ஐகோர்ட்டுக்கு 2 புதிய நீதிபதிகள் ஜனாதிபதி உத்தரவு
சென்னை ஐகோர்ட்டுக்கு 2 புதிய நீதிபதிகளை நியமித்து ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை,
வக்கீல்கள் என்.மாலா, சுந்தர்மோகன், கபாலி குமரேஷ் பாபு, எஸ்.சவுந்தர், அப்துல் கனி அப்துல் அமீது, ஆர்.ஜான் சத்தியன் ஆகியோரை சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகளாக நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதிகள் கொண்ட குழு மத்திய அரசுக்கும், ஜனாதிபதிக்கும் கடந்த பிப்ரவரி மாதம் பரிந்துரை செய்தது.
இதில், வக்கீல்கள் என்.மாலா, எஸ்.சவுந்தர் ஆகியோரை ஐகோர்ட்டு நீதிபதிகளாக நியமித்து, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார். இதையடுத்து இவர்கள் இருவரும் நீதிபதிகளாக விரைவில் பதவி ஏற்க உள்ளனர்.
மகாகவி
நீதிபதி என்.மாலாவின், தந்தை மகாகவி ஸ்ரீரங்கம் ஸ்ரீனிவாசராவ் என்ற ஸ்ரீ ஸ்ரீ, தாயார் சரோஜா ஸ்ரீ ஸ்ரீ. பள்ளிப்படிப்பை சென்னையில் உள்ள செயின்ட் ஜான் மற்றும் கேசரி பள்ளிகளிலும், சட்டப்படிப்பை சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியிலும் படித்தார். 1989-ம் ஆண்டு வக்கீலாக பதிவு செய்து சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டுகள், தீர்ப்பாயங்களில் ஏராளமான வழக்குகளில் ஆஜராகி திறம்பட வாதாடியுள்ளார்.
கடந்த 2020-ம் ஆண்டு புதுச்சேரி மாநில அரசு பிளீடராக நியமிக்கப்பட்டார். இவர்தான் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் பெண் வக்கீல் ஆவார். இதுதவிர புதுச்சேரி பல்கலைக்கழகம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் உள்ளிட்ட அமைப்புகள் சார்பிலும் ஆஜராகியுள்ளார்.
மயிலாடுதுறை
நீதிபதி என்.மாலாவின் கணவர் ராதா ரமணா, சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேசனில் அதிகாரியாக பணியாற்றுகிறார். இவர்களது மூத்த மகன் ஸ்ரீனிவாஸ் ஜெயபிரசாத் வக்கீலாக உள்ளார். இளைய மகன் சாய் பிரதீப், எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர நீட் தேர்வுக்கு தயாராகி வருகிறார்.
நீதிபதி எஸ்.சவுந்தர், மயிலாடுதுறையை சேர்ந்தவர். 1971-ம் ஆண்டு பிறந்த இவரது பெற்றோர் வக்கீல் ஆர்.சிவபுண்ணியம்-சிந்தாமணி ஆவர். மயிலாடுதுறையில் பள்ளிப்படிப்பையும், சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பையும் முடித்தார். 1993-ம் ஆண்டு வக்கீலாக பதிவு செய்த இவர், சத்தீஷ்கார் ஐகோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ்.வெங்கடாசலமூர்த்தியிடம் ஜூனியராக சேர்ந்தார்.
சொற்பொழிவு
ஏராளமான சிவில், கிரிமினல் வழக்குகளில் ஆஜராகி வாதிட்டுள்ளார். டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் பகுதி நேர விரிவுரையாளராக பணியாற்றியுள்ளார். தமிழ்நாடு ஜூடிசியல் அகடாமியில் பல்வேறு சட்டங்கள் குறித்து சொற்பொழிவு ஆற்றியுள்ளார்.
இவரது மனைவி பிருந்தா எம்.டெக். பட்டதாரி. மகன் சச்சின் இன்போசிஸ் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார்.