கொரோனா பாதித்த 11 பேருக்கு தொடர் சிகிச்சை
புதுவையில் புதிதாக ஒருவருக்கு கொரோனா பாதித்த நிலையில் 11 பேருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
புதுவையில் இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 303 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் புதுச்சேரியை சேர்ந்த ஒருவருக்கு மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது 11 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர்.
நேற்று முதல் தவணை தடுப்பூசியை 2 ஆயிரத்து 201 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 912 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 89 பேரும் செலுத்திக்கொண்டனர். இதுவரை 16 லட்சத்து 22 ஆயிரத்து 654 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.