பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது
கிருமாம்பாக்கத்தில் பணம் வைத்து சூதாடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்
கிருமாம்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தலைமையிலான போலீசார் நேற்று வண்ணான்குளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் சிலர் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தனர். இதைப்பார்த்த போலீசார், அவர்களை சுற்றிவளைத்து பிடித்தனர். விசாரணையில் அவர்கள் வண்ணான்குளம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் (வயது 38), கந்தன் என்கிற கந்தசாமி (33), சுபாஷ் (23) என்பது தெரியவந்தது. அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 6 ஆயிரத்து 300 ரொக்கப்பணம் மற்றும் சீட்டுக்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.