ஆட்சிக்கு வந்த 10 மாதத்தில் 208 வாக்குறுதிகள் நிறைவேற்றம் முதல்-அமைச்சர் பெருமிதம்
தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளில் 208 அறிவிப்புகளை ஆட்சிக்கு வந்த 10 மாதத்தில் நிறைவேற்றியுள்ளதாக சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை,
சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவை விதி எண் 110-ன் கீழ் அறிவிப்பை வெளியிட்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
வாக்குறுதிகள்
தமிழ்நாடு சட்டமன்றத்திலும், பொது வெளியிலும் தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகள் குறித்தும், அவற்றை இந்த அரசு நிறைவேற்றி வருவது குறித்தும் சில கருத்துகளும், விமர்சனங்களும் எதிர்க்கட்சியினரால் முன்வைக்கப்பட்டு வருவதால், அது குறித்து உறுப்பினர்களுக்கும், பொதுமக்களுக்கும் உண்மை நிலையை விளக்கும் வகையில், ஒரு வெள்ளை அறிக்கைக்குச் சமமான, ஒரு அறிக்கையை பேரவை விதி 110-ன்கீழ் வெளியிட விரும்புகிறேன்.
தி.மு.க. அரசு, ஆட்சிக்கு வந்து 10 மாதங்கள் நிறைவு பெற்றுள்ளது. தி.மு.க. தேர்தல் அறிக்கை தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை குறிப்பிட்ட காலவரையறைக்குள் நிறைவேற்றுவதற்கும், மாநிலப் பொருளாதாரத்தை மீட்பதற்கும், துறைவாரியான முன்னேற்றத்திற்கும், ஏற்ற வகையில் தயாரிக்கப்பட்ட அறிக்கையாகும். இந்த அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள 505 வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். அதில் சொல்லப்படாத நலத்திட்டங்களும் செயல்படுத்தப்படும் என்ற நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புடன் மக்கள் அளித்த மாபெரும் வெற்றியை பெற்று அமைந்துள்ள இந்த அரசு, அதனை நிறைவேற்ற உறுதியுடன் செயல்பட்டு வருகிறது.
நகைக்கடன் தள்ளுபடி
தமிழக மக்களின் நம்பிக்கையை உறுதி செய்யும் விதமாக, கடந்த மே 7-ந்தேதியன்று பதவியேற்ற ஒரு சில மணித் துளிகளிலேயே தமிழகத்திலுள்ள கோடிக்கணக்கான மக்கள் பயன்பெறும் வகையில் 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டு அரசாணைகளை நான் வெளியிட்டேன். 2.09 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ.4 ஆயிரம் கொரோனா நிவாரண நிதி. ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைப்பு. மகளிருக்கு அரசு நகரப் பஸ்களில் இலவசப் பயணம்.
மக்களின் மனுக்களின் மீது தீர்வு காண “உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் துறை. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான அனைத்து செலவினங்களையும் முதல்-அமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தில் அரசே ஏற்பு. இந்த ஐந்தில், முதல் நான்குமே தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்தவை. கடந்த 10 மாதங்களுக்குள் நிறைவேற்றப்பட்ட முக்கியமான சில வாக்குறுதிகளை நான் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன்.
வேளாண்மை உற்பத்தியைப் பெருக்கவும், விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கவும், முதன்முறையாக வேளாண்மைக்கென்று தனியாக இரண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் சுமார் 55 ஆயிரம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகை 2,756 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டது. கூட்டுறவு அமைப்புகள் மூலம் வழங்கப்பட்ட 5 சவரனுக்குட்பட்ட ரூபாய் 5 ஆயிரத்து 250 கோடி நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
கொரோனா இழப்பீடு தொகை
பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு ஊரக பகுதிகளில் 1,200 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தைத் செயல்படுத்துவது. ‘நமக்கு நாமே’ திட்டம். உள்ளூர் சமூகங்களுடன் இணைந்து 100 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படுவது. ‘‘இயற்கை வேளாண்மை வளர்ச்சித் திட்டம்’’ என்ற உன்னதத் திட்டத்தை செயல்படுத்துவது. அண்ணா நூற்றாண்டு நூலகம் புதுப்பொலிவு பெறக்கூடிய வகையில் புனரமைத்தல் மற்றும் மதுரையில் கலைஞர் நூலகம் அமைத்தல்.
பத்திரிகையாளர்கள், இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம், மீத்தேன், நியூட்ரினோ மற்றும் கூடங்குளம் அணுமின் நிலையம் மற்றும் எட்டுவழிச்சாலைத் திட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகள், பொதுமக்கள் மீது போடப்பட்ட 5,570 வழக்குகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. மூன்று வேளாண் சட்டங்கள் மற்றும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, மேற்படி 3 வேளாண் சட்டங்களும் மத்திய அரசால் திரும்பப் பெறப்பட்டுள்ளன.
நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கான சட்ட முன்வடிவைப் சட்டப் பேரவையில் நிறைவேற்றியது. கொரோனா சிகிச்சை பணியில் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் கொரோனா இழப்பீட்டுத் தொகை.
அதேபோல், கொரோனா நோய்த் தொற்றால் காவல் துறையில் உயிரிழந்த காவல்துறை அலுவலர்கள் மற்றும் காவலர்களின் குடும்ப வாரிசுதாரர்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் வீதம் நிவாரணத் தொகை.
மகப்பேறு கால விடுப்பு
குடும்ப அட்டை கோரி விண்ணப்பிக்கக்கூடிய தகுதி வாய்ந்த அனைத்து நபர்களுக்கும் பதினைந்து நாட்களுக்குள் ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்குதல். தமிழக அரசிற்கு ஆலோசனைகளை வழங்கிட ‘முதல்-அமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு’ அமைக்கப்பட்டுள்ளது. பணியிலிருக்கும்போது உயிரிழக்கும் அரசுப் பணியாளரின் குடும்பத்தினருக்கு, குடும்பப் பாதுகாப்பு நிதியிலிருந்து வழங்கப்படும் உதவித் தொகை 3 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் அரசுப் பணிகளுக்கான தேர்வுகளில் தமிழ் மொழி தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் சம்பவம் குறித்து தவறாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டது மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண தொகை மற்றும் கல்வி தகுதியின் அடிப்படையில் அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது. மகளிர் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களிலிருந்து 12 மாதங்களாக உயர்த்தப்பட்டது.
208 அறிவிப்புகள்
இந்த மாமன்றத்தில் கவர்னர் ஆற்றிய உரையில் 52 தேர்தல் வாக்குறுதிகளும், கவர்னர் உரை குறித்த என்னுடைய பதிலுரையில் 1 வாக்குறுதியும், நிதி அமைச்சரால் தாக்கல் செய்யப்பட்ட 2021-2022-ம் ஆண்டு மற்றும் 2022-2023-ம் ஆண்டுக்கான வரவு-செலவு அறிக்கையில் 33 வாக்குறுதிகளும், வேளாண்மைத் துறை அமைச்சரால் வேளாண்மைக்காக தாக்கல் செய்யப்பட்ட 2021-2022-ம் ஆண்டு மற்றும் 2022-2023-ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் 21 வாக்குறுதிகளும், விதி 110-ன்கீழ் வெளியிடப்பட்ட அறிக்கையில் 3 வாக்குறுதிகளும், அவரவர் துறை சார்பாக அமைச்சர்கள் வெளியிட்ட அறிவிப்புகளில் 78 வாக்குறுதிகளும், இதர அறிவிப்புகளில் 10 வாக்குறுதிகளும், நேரடியாக நிறைவேற்றப்பட்ட 10 வாக்குறுதிகளும் என இதுவரை மொத்தம் 208 தேர்தல் வாக்குறுதிகள் அரசின் அறிவிப்புகளாக இடம்பெற்றுள்ளன.
இவை அனைத்திற்கும் உரிய அரசாணைகள் வெளியிடப்பட்டு, அரசாணைகள் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் அனைத்தும் முறையாகவும், முழுமையாகவும் செயல்படுத்தப்படுவதை இந்த அரசு முனைப்புடன் கண்காணித்து வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.