மதுரை மீனாட்சியம்மன் கோவில் வருமானம் ரூ.83 லட்சம் - கோவில் நிர்வாகம்
மதுரை மீனாட்சியம்மன் கோவில் மற்றும் உபகோவில்களின் உண்டியல்களில் ரூ. 83.28 லட்சம் வருமானம் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மதுரை,
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உண்டியல் வருமானம் 83 லட்ச ரூபாய்க்கும் அதிகமாக கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 11 கோயில்களில், பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் பணம் மற்றும் பொருட்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் ஒவ்வொரு மூன்று மாதத்திற்கு ஒருமுறையும் எண்ணப்படும். கொரோனா பரவலுக்கு பிறகு, மீனாட்சியம்மன் கோவில் உண்டியல் காணிக்கை, மாதம் ஒருமுறை எண்ணப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மதுரை மீனாட்சியம்மன் கோவில் மற்றும் உபகோவில்களின் இந்த மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டதில், ரூ.83.28 லட்சம் வருமானம் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.