உருட்டு கட்டையால் பெற்ற தாயை அடித்து கொன்ற மகன் கைது- பால்கர் அருகே பயங்கரம்
பெற்ற தாயை உருட்டு கட்டையால் அடித்து கொன்ற மகன் கைது செய்யப்பட்டார்.
வசாய்,
பெற்ற தாயை உருட்டு கட்டையால் அடித்து கொன்ற மகன் கைது செய்யப்பட்டார்.
70 வயது மூதாட்டி
பால்கர் மாவட்டம் தாராப்பூர் பகுதியை சேர்ந்தவர் ருபேஷ் காகானி (வயது39). குடிப்பழக்கம் கொண்ட இவர் தனது 70 வயது தாயுடன் வசித்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த தாயுடன் சிறு பிரச்சினை தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த ருபேஷ் காகானி அங்கு கிடந்த உருட்டு கட்டையால் தாயை சரமாரியாக தாக்கினார். இதில் மண்டை உடைந்து சம்பவ இடத்திலேயே மூதாட்டி உயிரிழந்தார்.
கைது
இது பற்றி அறிந்த அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.