வேலையில்லா பட்டதாரிகளுக்கு ஜி.எஸ்.டி. கணக்குகள் நிர்வாக உதவியாளர் பயிற்சி
வேலையில்லா பட்டதாரிகளுக்கு உடனடி வேலைவாய்ப்புக்காக ஜி.எஸ்.டி. கணக்குகள் நிர்வாக உதவியாளர் பயிற்சியினை திறன் மேம்பாட்டுக் கழகத்தோடு இணைந்து, மங்கள்யான் தொழில்நுட்ப தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கம் வழங்குகிறது.
சென்னை,
தமிழக அரசு, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் மங்கள்யான் தொழில்நுட்ப தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கம் இணைந்து படித்து வேலையில்லா இளைஞர்களுக்கு உடனடி வேலை வாய்ப்புக்கான 3 மற்றும் 6 வாரங்களுக்கான குறுகிய கால பயிற்சிகளை இலவசமாக அளித்து வருகிறது.
அந்தவகையில், கணக்குகள் நிர்வாகம் மற்றும் ஜி.எஸ்.டி. கணக்குகள் நிர்வாக உதவியாளர் பயிற்சிகளுக்கான அறிமுக வகுப்பு வருகிற 26 மற்றும் 28-ந்தேதிகளில் காலை 11 மணி முதல் 12.30 மணி வரை சென்னை அம்பத்தூர் மகாகவி பாரதியார் நகர் கே.கே. முதல் தெருவில் உள்ள சரஸ்வதி விதியாலயா பள்ளியின் பயிற்சி வளாகத்தில் நடைபெற உள்ளது.
இந்த அறிமுக வகுப்பினை தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் 3 மற்றும் 6 வார முழு நேர தொடர் வகுப்புகளில் பயில அனுமதிக்கப்படுவர். இந்த பயிற்சிகள் அனைத்தும் முற்றிலும் இலவசம்.
பயன் பெறலாம்
பயிற்சிகளை திறம்பட முடித்தவர்களுக்கு, தமிழக அரசின் சான்றிதழ் வழங்குவதுடன், அவர்கள் நல்ல பணியில் சேருவதற்கும், ஜி.எஸ்.டி. கணக்குகள் ஆலோசகர் மற்றும் சுயதொழில் தொடங்குவதற்கு தேவையான ஆலோசனைகள் இலவசமாக பயிற்சி மையங்கள் மூலமாக உதவி செய்து வருவதுடன், பயிற்சியாளர்களுக்கு, பயிற்சிக்கு வந்து செல்வதற்கான போக்குவரத்து செலவினையும் தமிழக அரசு வழங்குகிறது.
இளங்கலை பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்பு படித்து வேலையற்ற ஆண்-பெண் இருபாலரும் இலவச பயிற்சிகளில் சேர்ந்து பயன்பெறலாம். 30 இடங்களே உள்ள இந்த குறுகியகால இலவச பயிற்சிகளின் அறிமுக வகுப்பு மற்றும் பயிற்சிகளில் சேருவதற்கு முன்பதிவு மிகவும் அவசியம். விண்ணப்பம் தொடர்பான மேலும் விவரங்களுக்கு பயிற்சி ஒருங்கிணைப்பாளரை 98690 41169 என்ற செல்போன் எண்ணிலும், mangalyantwcs@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.
மங்கள்யான் தொழில்நுட்ப தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்த தகவல் கூறப்பட்டுள்ளது.