சங்கிலி பறித்த ஆணழகன் கைது ‘மிஸ்டர் இந்தியா’ பட்டம் வென்றவர்
என்ஜீனியரான இவர் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக சங்கிலி பறிப்பில் ஈடுபட்டதாக போலீசாரிடம் தெரிவித்தார்.
பெரம்பூர்,
சென்னை கொண்டித்தோப்பு ஜிந்தா சாகிப் தெருவை சேர்ந்தவர் ஜெய்மால். இவரது மனைவி ரத்தினாதேவி (வயது 58). இவர் நேற்று முன்தினம் பெத்து நாயக்கன் தெருவழியாக நடந்து சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் அவரது கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிவிட்டார். இது குறித்து ஏழுகிணறு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சியை வைத்து மண்ணடி மரக்காயர் தெருவை சேர்ந்த முகமது பாசில் (22) என்பவரை கைது செய்தனர். என்ஜீனியரான இவர் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக சங்கிலி பறிப்பில் ஈடுபட்டதாக போலீசாரிடம் தெரிவித்தார். இவர் மீது கொரட்டூர் போலீஸ் நிலையத்திலும் சங்கிலி பறிப்பு வழக்கு நிலுவையில் உள்ளது. இவர் கடந்த 2020-ம் ஆண்டு இளையோருக்கான ஆணழகன் போட்டியில் ‘மிஸ்டர் இந்தியா பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.