அரசு பள்ளி பெருமையின் அடையாளம் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

அரசு பள்ளி வறுமையின் அடையாளம் அல்ல; பெருமையின் அடையாளம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

Update: 2022-03-20 17:22 GMT
திருச்சி,

திருச்சி பீமநகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் பள்ளி கல்வித்துறை சார்பில் இன்று பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார்.

கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியதாவது:-

தமிழகம் முழுவதும் இன்று பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. பெற்றோர்களும் ஆசிரியர்களும் நண்பர்களாக இருக்க வேண்டும். இந்த பள்ளி மேலாண்மை குழுவின் மூலம் மாதம் ஒருமுறை ஒரு கூட்டம் நடத்தப்படும். 

பட்ஜெட்டில் கல்வித்துறைக்காக ரூ.36,895.89கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி வறுமையின் அடையாளம் அல்ல. பெருமையின் அடையாளம் என மாற்றிக்காட்டுவோம். 

இவ்வாறு அவர் பேசினார். 

மேலும் செய்திகள்