நடிகர் சங்க தேர்தலில் 2 ஆண்டு சட்ட போராட்டத்திற்கு பிறகு கிடைத்த வெற்றி : கார்த்தி
நடிகர் சங்க தேர்தலில் 2 ஆண்டு சட்ட போராட்டத்திற்கு பிறகு வெற்றி கிடைத்துள்ளதுஎன தெரிவித்துள்ளர்
சென்னை,
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த 2019-ம் ஆண்டு் ஜூன் 23-ந் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் கே.பாக்கியராஜ் தலைமையிலான சங்கரதாஸ் அணியும், நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் போட்டியிட்டன. தலைவர், 2 துணைத்தலைவர்கள், பொதுச்செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் என 29 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
பாண்டவர் அணி தரப்பில் தலைவர் பதவிக்கு நாசர், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷால், பொருளாளர் பதவிக்கு கார்த்தி ஆகியோர் போட்டியிட்டனர். மற்றொரு தரப்பில் தலைவர் பதவிக்கு பாக்யராஜ், பொதுச்செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ், பொருளாளர் பதவிக்கு பிரஷாந்த் ஆகியோர் போட்டியிட்டனர்.
தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ண சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்ததையடுத்து, சுமார் 3 ஆண்டுகளுக்குப் பிறகு வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில், பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட விஷால் வெற்றி பெற்றார் . அதேபோல், பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட கார்த்தியும் வெற்றி
பெற்றார் .
பாண்டவர் அணி சார்பாக துணை தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பூச்சி முருகன் மற்றும் கருணாஸ் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்நிலையில் வெற்றிக்கு பிறகு பேட்டியளித்த நடிகர் கார்த்தி கூறியதாவது ;
நடிகர் சங்க தேர்தலில் 2 ஆண்டு சட்ட போராட்டத்திற்கு பிறகு வெற்றி கிடைத்துள்ளது .பதவியேற்கும் நாளிலிருந்து 3 ஆண்டுகள் பதவி வகிப்போம் .3 ஆண்டுகளில் நடிகர் சங்க கட்டடம் கட்டி முடிக்கப்படும் இவ்வாறு அவர் கூறினார் .