செயின் பறிப்பு வழக்கில் மிஸ்டர் இந்தியா ஆணழகன் பட்டம் வென்ற வாலிபர் கைது...!

சென்னையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட மிஸ்டர் இந்தியா ஆணழகன் பட்டம் வென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-03-20 15:07 GMT
சென்னை,

சென்னை, கொண்டித்தோப்பு பகுதியில் உள்ள ஜிந்தா சாகிப் தெருவை சேர்ந்தவர் ஜெய்மால். இவரின் மனைவி ரத்தினாதேவி (58) நேற்று ஏழுகிணறு படவட்டம்மன் கோயில் தெருவில் உள்ள ஜெயின் கோவிலுக்கு சென்றுள்ளார். பின்னர் பெத்து நாயக்கன் தெருவழியாக வரும் போது பைக்கில் வந்த மர்ம நபர் ஒருவர் ரத்தினா தேவி கழுத்தில் கிடந்த செயினை பறித்துக்கொண்டு தப்பிவிட்டார்.

இது குறித்து ஏழுகிணறு போலீசார் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதன் படி மண்ணடி, மரக்காயர் தெருவை சேர்ந்த முஜுபூர் ரகுமான் மகன் முகமது பாசில் (22) என்பவரை கைது செய்தனர். இவர் மீது கொரட்டூர் காவல் நிலையத்திலும், செயின் பறித்ததாக வழக்கு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. 

முகமது பாசில் பி.டெக். பட்டதாரி ஆவார். இவர் கடனில், ஐ போன் ஒன்று வாங்கி, ஷலின் என்பவருடம் சேர்ந்து தொழில் செய்துள்ளார். அதில், கூட்டாளி ஏமாற்றியதால் கடன் சுமை ஏற்பட்டுள்ளது. இதனால் கடனை திருப்பிக் கொடுக்க முடியாததால் செயின் பறிப்பில் ஈடுபட்டதாக முகமது பாசில் வாக்குமூலம் கொடுத்ததாக தெரிகிறது. 

இவர் கடந்த 2020ம் ஆண்டு இளையோருக்கான ஆணழகன் போட்டியில் கலந்துக்கொண்டு மிஸ்டர் இந்தியா பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்