தேனி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியல்; போக்குவரத்து பாதிப்பு...!
தேனி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.
மதுரை,
மதுரை மாவட்டம் ஆண்டிப்பட்டியை அருகே கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் மாணவியின் சாவில் மர்மம் உள்ளதாக கூறி தேனி-மதுரை தேசிய நெடுஞ்சாலையை மறிந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனை அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மாணவியின் உறவினர்களிடம் பேச்சு வார்ததை நடத்தினர். ஆனால் அவர்கள் சாலை மறியலை கைவிடாமல் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.