மாதாந்திர உதவித்தொகை பெற மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை

மாதாந்திர உதவித்தொகை பெற 30 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை அமைச்சர் சந்திர பிரியங்கா வழங்கினார்

Update: 2022-03-19 16:12 GMT
காரைக்கால்
காரைக்கால் மாவட்ட சமூக நலத்துறை சார்பில் நெடுங்காடு தொகுதியை சேர்ந்த 30 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை பெற அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. 
அமைச்சர் சந்திர பிரியங்கா தலைமை தாங்கி பயனாளிகளுக்கு அடையாள அட்டையை வழங்கினார். நிகழ்ச்சியில் சமூகநலத்துறை உதவி இயக்குனர் சத்யா மற்றும் அலுவலக ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
அடுத்த (ஏப்ரல்) மாதம் முதல் அவரவர் வங்கிக் கணக்கில் அரசின் உதவித்தொகைக்கான பணம் செலுத்தப்படும் என்று சமூக நலத்துறை உதவி இயக்குனர் சத்யா தெரிவித்தார்.

மேலும் செய்திகள்