நெல்லை, குமரியில் அடுத்த 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

Update: 2022-03-19 16:12 GMT
சென்னை, 

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கன்னியாகுமரி, நெல்லை மற்றும் உள் தமிழக மாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 22, 23-ந்தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் சித்தாறு, பேச்சிப்பாறை மற்றும் கோவை மாவட்டம் சிங்கோனா பகுதிகளில் தலா 1 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது.

இந்நிலையில் வருகிற 20, 21, 22 ஆகிய தேதிகளில் அந்தமான் கடல், தென்கிழக்கு வங்கக்கடல், மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் மியான்மர் கடலோர பகுதிகளில் அதிவேகத்தில் காற்று வீசக்கூடும். இப்பகுதிகளில் கடல் சீற்றத்துடன் இருக்கும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்