தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 58-ஆக குறைந்தது

தொற்று பாதிப்பைக் கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 36 ஆயிரத்து 324- மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

Update: 2022-03-19 14:57 GMT
சென்னை,

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா தொற்று பாதிப்பு வேகமாக சரிந்து வருவது மக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது. தொற்று பாதிப்பு குறைந்துள்ளதால், கொரோனா கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளன. 

தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: தமிழகத்தில் இன்று 58 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 52 ஆயிரத்து 334- ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்து 118 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பால் இன்றும் உயிரிழப்பு எதுவும் இல்லை.  தொற்று பாதிப்பைக் கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 36 ஆயிரத்து 324- மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்