சென்னை ஐஐடி வளாகத்தில் 4 மான்கள் உயிரிழந்த விவகாரம் : ஆந்த்ராக்ஸ் நோய் காரணமல்ல : ஆய்வில் உறுதி
சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் கடந்த 2 நாட்களில் அடுத்தடுத்து 4 மான்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை,
சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் கடந்த 2 நாட்களில் அடுத்தடுத்து 4 மான்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மான் ஆந்த்ராக்ஸ் நோயின் தாக்கத்தால் உயிரிழந்து இருக்கலாம் என மான்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது
இதுபற்றி சென்னை ஐ.ஐ.டி. நிர்வாகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
வனவிலங்கு மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகளும், சென்னை மாநகராட்சியும் இத்தகைய அறிவிக்கக்கூடிய நோய்களுக்கான நெறிமுறைகளை ஐ.ஐ.டி. நிர்வாகத்துக்கு வழங்கி வருகிறது. அதன்படியே நாங்கள் பின்பற்றி வருகிறோம்.
மற்ற வனவிலங்குகளை கண்காணிக்க 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. அந்த குழு 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறது. ஐ.ஐ.டி. நிர்வாகம் ஆந்த்ராக்ஸ் தடுப்பூசியை விரைவில் தொடங்கும். ஐ.ஐ.டி. வளாகத்துக்குள் ஆந்த்ராக்ஸ் நோய் தொற்று எப்படி பரவியது? என்பது பற்றி பகுப்பாய்வுகள் செய்து விசாரிக்கப்பட்டு வருகின்றன.
நாய்கள் மூலம் பரவியிருக்கலாம் என்று கருதுகிறோம். இது அவசர நிலை தான். ஆனால் பீதி அடையவேண்டாம். ஐ.ஐ.டி. வளாகத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் குடியிருப்பாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நாங்கள் முழு விழிப்புடன் செயல்பட்டு வருகிறோம் என கூறியது .
இந்நிலையில் சென்னை ஐஐடி வளாகத்தில் உயிரிழந்த மான்கள் ஆந்த்ராக்ஸ் நோயால் உயிரிழக்கவில்லை என கால்நடை மருத்துவப் பல்கலை ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது