மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட் எடப்பாடி பழனிசாமி பேட்டி
சட்டசபையில் இருந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நேற்று வெளிநடப்பு செய்தனர். பின்னர் பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி, இந்த பட்ஜெட் மக்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளதாக தெரிவித்தார்.
சென்னை,
சட்டசபையில் நேற்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நேரத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் சட்டசபை நுழைவுவாயிலில் நின்று கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.
இதன்பின்னர் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
எதையும் நிறைவேற்றவில்லை
பட்ஜெட் வெத்துவேட்டாக இருக்கிறது. 2021-2022-ம் ஆண்டில் 1 லட்சத்து 8 ஆயிரத்து 175 கோடி ரூபாய் வாங்கி செலவு செய்து இருக்கிறார்கள். வருகிற நடப்பாண்டில் சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் கோடி கடன் வாங்குவதற்காக அறிவித்து இருக்கிறார்கள்.
2011-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் இருந்து அகலும்போது முதல்-அமைச்சராக ஜெயலலிதா பொறுப்பு ஏற்கும்போது 1 லட்சம் கோடி கடனுடன் பொறுப்பு ஏற்றார். 2021-ம் ஆண்டு நாங்கள் கட்சியை விட்டு செல்லும்போது 4.8 லட்சம் கோடி கடன் இருந்தது.
அதாவது 3.8 லட்சத்துக்கு கீழ் கடன் நடப்பில் இருந்தது. பெரும்பாலும் மூலதன செலவு செய்து இருந்தோம். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. ஆனால் எதையுமே நிறைவேற்றவில்லை. கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படும் என தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தெரிவித்து இருந்தது.
ஆனால் அதுபற்றிய தகவல் இல்லை. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுவதாக அறிவித்து இருந்தது. அதையும் சாக்கு போக்கு சொல்லி தள்ளி வைத்து உள்ளனர்.
டீசல் விலை
கடந்த ஆண்டு பெட்ரோல் மட்டும் 3 ரூபாய் குறைத்தனர். டீசலுக்கு குறைக்கவில்லை. உரம் விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. இதுபற்றி மத்திய அரசிடம் எதுவும் கேட்கவில்லை. அ.தி.மு.க. ஆட்சியின்போது கொரோனா தொற்று பரவி இருந்த காலகட்டம். தொழிற்சாலைகள் எதுவும் முழுமையாக இயங்கவில்லை. அரசுக்கு வருமான வருவாய் குறைந்தது. தி.மு.க. ஆட்சியில் வருவாய் அதிகரித்த நிலையில் அதிக கடன் பெற்றனர்.
அரசு ஊழியர்களுக்கு பழைய ஒய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என்று தேர்தல் அறிக்கையில் தெரிவித்தார்கள். இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை. படித்த அரசு ஊழியர்களையும் ஏமாற்றிவிட்டார்கள். தமிழக அரசின் கடன் சுமையை குறைக்கவும், வருவாயை பெருக்கவும், ஆலோசனை கூற அமைக்கப்பட்ட குழு என்னென்ன திட்டங்களை அரசிடம் முன்வைத்துள்ளது என்பது குறித்து எந்த குறிப்பும் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை.
மக்களுக்கு ஏமாற்றம்
தேர்தல் நேரத்தில் தி.மு.க. அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தி.மு.க. அரசின் பட்ஜெட் வார்த்தை ஜால தோரணங்களால் அமைக்கப்பட்ட வாய்பந்தல். இதனை வாய் வாடகைதாரர்கள் வேண்டுமானால் தங்கள் ஆதாயத்திற்காக பாராட்டலாம். மக்கள் நலனில் உண்மையில் அக்கறை கொண்ட யாராலும் இந்த மக்களை ஏமாற்றும் நிதிநிலை அறிக்கையை வரவேற்க முடியாது. தி.மு.க.வின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது.
உள்ளாட்சி தேர்தலில் வேண்டும் என்றே திட்டமிட்டு, அ.தி.மு.க. எங்கு எல்லாம் அதிகம் வெற்றிபெற்றுள்ளதோ அங்கு எல்லாம் தலைவர் தேர்தலையும், துணைத்தலைவர் தேர்தலையும் நடத்தாமல் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று தள்ளிவைத்துள்ளார்கள். இந்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது ஜனநாயக படுகொலை. நேரடியாக அ.தி.மு.க.வை சந்திக்க திராணியற்ற கட்சி தி.மு.க. என்பது நிரூபணம் ஆகியுள்ளது.
பொய் வழக்கு
வேண்டுமென்றே திட்டமிட்டு முன்னாள் அமைச்சர்கள் மீது அவதூறுகளை பரப்புவது, கட்சியினரும், தொண்டர்களும், முன்னாள் அமைச்சர்களும் முழுமையாக கட்சி பணியில் ஈடுபடாத வகையில் ஒரு சூழ்நிலையை ஏற்படுத்துவதற்காகத்தான் சோதனை நடத்துகிறார்கள்.
இந்த 10 மாத கால ஆட்சியில் எந்த திட்டத்தை கொண்டுவந்து நிறைவேற்றியுள்ளார்கள்?. எங்கள் ஆட்சியில் போடப்பட்ட திட்டத்தை, முடிவுற்ற பணிகளைத்தான் முதல்-அமைச்சர் திறந்து வைத்து வருகிறார். எதிர்க்கட்சியில் உள்ள நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் மீது பொய் வழக்கு போடுவது போன்றவற்றை விட்டுவிட்டு, ஆக்கப்பூர்வமான பணியை செய்ய வேண்டும். அப்படி செய்தால்தான் அடுத்தது நீங்கள் (தி.மு.க.) எதிர்க்கட்சியாக உட்கார முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.