ஹிஜாப் அணிய தடை : கர்நாடக ,பாஜக அரசை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்
பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதித்த கர்நாடக பாஜக அரசை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
கர்நாடகத்தில் கடலோர பகுதியில் அமைந்துள்ளது உடுப்பி மாவட்டம். அங்குள்ள குந்தாப்புரா அரசு பி.யூ.கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் கடந்த மாதம்(பிப்ரவரி) 1-ந்ேததி ஹிஜாப் அணிந்து வகுப்புக்கு வந்தனர். அக்கல்லூரியின் முதல்வர், வகுப்பு அறைக்குள் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதித்து உத்தரவிட்டார். அந்த தடையை மீறி அந்த முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்தனர். அவர்களை அக்கல்லூரி முதல்வர், வகுப்புக்குள் அனுமதிக்கவில்லை. அவர்கள் கல்லூரி வளாகத்திற்கு வெளியே தடுத்து நிறுத்தப்பட்டனர்.
கர்நாடகத்தில் பள்ளி-கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதித்து. கர்நாடக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து முஸ்லிம் மாணவிகள் கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, கர்நாடக அரசின் உத்தரவு செல்லும் என்று கூறி தீர்ப்பு வழங்கியது.
இந்நிலையில் பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதித்த கர்நாடக பாஜக அரசை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர் . ஸ்ரீவில்லிபுத்தூர், திருவாடானை, குடியாத்தம், வாணியம்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் இஸ்லாமியர்கள் நடத்தினர்.