மணக்குள விநாயகர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்
மணக்குள விநாயகர் கோவிலில் 1,008 சங்காபிஷேகமும், உற்சவருக்கு 108 சங்காபிஷேகமும் நடந்தது.
புதுச்சேரி
புதுவை மணக்குள விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் முடிந்து 7-ம் ஆண்டு சங்காபிஷேக விழா தொடங்கியது. இதையொட்டி யாக பூஜை நடந்தது. தொடர்ந்து மணக்குள விநாயகருக்கு கலாசாபிஷேகமும், 1,008 சங்காபிஷேகமும், உற்சவருக்கு 108 சங்காபிஷேகமும் நடந்தது. அதைத்தொடர்ந்து இரவு உற்சவமூர்த்தி வீதியுலா நடந்தது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.