அந்தமான் நிக்கோபார் தீவுகளில் புயல் எச்சரிக்கை- தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விரைந்தனர்...!

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் புயல் மற்றும் கன மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக அரக்கோணம் ராஜாளி கடற்படை விமான தளத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விரைந்தனர்.

Update: 2022-03-18 13:39 GMT
அரக்கோணம், 

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இது புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும், புயல் மற்றும் கன மழைக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையடுத்து அந்தமான் நிக்கோபார் தீவுகளின் நிர்வாகம் கேட்டுக் கொண்டதின் அடிப்படையில், அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படையின் துணை கமாண்டன்ட் வைத்தியலிங்கம் தலைமையில் 130 வீரர்கள் அதிநவீன மீட்புப் கருவிகளுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகாக அரக்கோணம் ராஜாளி கடற்படை விமான தளத்தில் இருந்து விமானப்படை விமானம் மூலம் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு விரைந்தனர். 

மேலும் செய்திகள்