புதுச்சேரியில் ஹோலி கொண்டாட்டம்

புதுச்சேரியில் தங்கியுள்ள வெளிமாநிலத்தவர்கள் ஹோலி பண்டிகையை வெகு விமரிசையாக கொண்டாடினர்.

Update: 2022-03-18 13:35 GMT
புதுச்சேரி
புதுச்சேரியில் தங்கியுள்ள வெளிமாநிலத்தவர்கள் ஹோலி பண்டிகையை வெகு விமரிசையாக கொண்டாடினர். ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகள் வண்ண பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
நகரின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் வடமாநிலத்தவரும் இந்த கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். வண்ண பொடிகளை உடலில் பூசிக்கொண்டு வாகனங்களில் வலம் வந்தனர். மேலும் எதிரில் வந்தவர்களுக்கு அவர்கள் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்