மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
சென்னை,
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று (18-3-2022)மாலை 5 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாறு கலந்துகொள்ள வேண்டும் என்று அரசு தலைமை கொறடா கோவி. செழியன் கேட்டுக்கொண்டுள்ளார்.
சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம், விவாதத்தில் பங்கேற்கும் உறுப்பினர்கள் மற்றும் கூட்டத்தொடரில் உறுப்பினர்களின் செயல்பாடுகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை செய்ய வாய்ப்பு உள்ளது.
தமிழக சட்டசபை கூட்டத் தொடர் இன்று காலை 10 மணிக்கு தலைமை செயலக வளாகத்தில் அமைந்துள்ள பேரவை மண்டபத்தில் தொடங்குகிறது. அன்றைய தினம், நிதி மந்திரி பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.