வெளிநாட்டு மருத்துவ தொழில்நுட்பத்தை தமிழகத்துக்கு கொண்டு வரும் திட்டம்
வெளிநாட்டு மருத்துவ தொழில்நுட்பத்தை தமிழகத்துக்கு கொண்டு வரும் திட்டத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
சென்னை,
அமெரிக்கா, லண்டன், மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றும் தமிழ் பேசும் டாக்டர்களை ஒன்றிணைத்து வெளிநாடுகளில் மருத்துவம் மற்றும் மருத்துவ தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படும் அதிநவீன மருத்துவ முறைகளை தமிழகத்துக்கு கொண்டு வருவதற்காக ‘தமிழகத்துக்கு முதல் முன்னுரிமை' என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அந்த அடிப்படையில் மலேசியா, கரிபீயன் தீவு போன்ற பகுதிகளில் லேப்ராஸ்கோப்பிக் அறுவை சிகிச்சையின்போது உதவியாளர் இல்லாமல் இயக்கப்படும் அதிநவீன கேமராவை தமிழகத்தில் அறிமுகப்படுத்த இந்த அமைப்பு முயற்சி மேற்கொண்டது.
லண்டனைச் சேர்ந்த அதிநவீன மருத்துவ உபகரணங்களை தயாரித்து வரும் நிறுவனம் அறுவை சிகிச்சையின்போது மிக துல்லியமாக காட்சிப்படுத்தும் இந்த கேமராவை உருவாக்கி உள்ளது. இதனை டாக்டர்கள் தங்களது நெற்றியில் பொருத்திக்கொண்டு உதவியாளர் துணையின்றி அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொள்ள முடியும்.
அறிமுக விழா
இந்த அதிநவீன சாதனத்தை சென்னையில் உள்ள பிரிட்டிஷ் துணை தூதரகத்துடன் இணைந்து தமிழகத்தில் அறிமுகப்படுத்தும் விழா சென்னையில் நேற்று நடந்தது.
லண்டனில் பணியாற்றி வரும் சேலத்தை சேர்ந்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் ராஜேஷ் சிவப்பிரகாசம் வரவேற்றார்.
தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விழாவில் கலந்து கொண்டு, அதிநவீன சாதனத்தை தமிழகத்தில் உள்ள ஆஸ்பத்திரிகளில் பயன்படுத்தும் வகையில் அறிமுகம் செய்தார். இதைத்தொடர்ந்து அதிநவீன சாதனம் அறுவை சிகிச்சையின் போது எந்த அளவுக்கு உதவியாக இருக்கும் என்பதை அமைச்சரிடம் டாக்டர்கள் விளக்கி கூறினர்.
உறுதிமொழி
விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசும்போது, ‘10 ஆண்டுகளாக ஆராய்ச்சி மேற்கொண்டு இந்த புதிய சாதனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 15 ஆயிரம் பேருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ அறுவை சிகிச்சையின்போது இந்த அதிநவீன சாதனம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு அறுவை சிகிச்சைகளுக்கு இந்த மருத்துவ சாதனத்தை பயன்படுத்த முடியும். இதன்மூலம் தமிழகத்தை சேர்ந்த பெண்கள் ஏராளமானோர் பயன் அடைவர். மருத்துவத்துறையில் புதிய தொழில்நுட்பத்தை அமல்படுத்துவதில் தமிழகம் எப்போதும் முன்மாதிரியாக இருக்கும்' என்றார்.
முன்னதாக விழாவில் கலந்து கொண்ட வெளிநாடுகளில் பணியாற்றும் தமிழ் பேசும் பிரபல மருத்துவ நிபுணர்கள் வெளிநாட்டு மருத்துவ தொழில்நுட்பத்தை முதலாவதாக தமிழகத்துக்கு கொண்டு வர முயற்சி செய்வோம் என கையெழுத்திட்டு எடுத்துக்கொண்ட உறுதிமொழியை அமைச்சரிடம் வழங்கினர். விழாவில் பிரிட்டிஷ் துணை தூதர் பால் டிரைடன் உள்ளிட்ட வெளிநாடுகளில் பணியாற்றும் தமிழ் பேசும் பிரபல மருத்துவ நிபுணர்களான ராம் சேனாசி, டான் அருளம்பலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.