என்ஜினீயர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் சாகும் வரை சிறை: யுவராஜ் உள்பட 10 பேரும் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு

என்ஜினீயர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் சாகும் வரை சிறை: யுவராஜ் உள்பட 10 பேரும் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு விரைவில் விசாரணை.

Update: 2022-03-17 19:54 GMT
மதுரை,

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த என்ஜினீயர் கோகுல்ராஜ் கடந்த 2015-ம் ஆண்டு காதல் விவகாரத்தில் ஆணவ கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், குற்றவாளிகளான சங்ககிரியைச் சோ்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்பட 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சாகும் வரை சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று மதுரை சிறப்பு கோர்ட்டு கடந்த 8-ந் தேதி தீர்ப்பு கூறியது. இதையடுத்து 10 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் யுவராஜ் மட்டும் கோவை சிறைக்கு மாற்றப்பட்டார்.

இந்த நிலையில், தங்களுக்கு வழங்கப்பட்டு உள்ள தண்டனையை எதிர்த்து யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வர உள்ளன.

மேலும் செய்திகள்