50 சதவீத இடஒதுக்கீடு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, கி.வீரமணி பாராட்டு

50 சதவீத இடஒதுக்கீடு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, கி.வீரமணி பாராட்டு.

Update: 2022-03-17 18:39 GMT
சென்னை,

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மேற்படிப்புகளில் அரசு டாக்டர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. இது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் சமூகநீதிப் போராட்டத்திற்குக் கிடைத்த மற்றொரு மகத்தான வெற்றியாகும். சமூகநீதி வரலாற்றில் இது மேலும் ஒரு மைல்கல். முதல்-அமைச்சருக்கும்- வாதாடிய வக்கீல்களுக்கும் பாராட்டுக்கள்.

பல பட்டிதொட்டிகளிலும், மலைப் பகுதிகளிலும் பணிபுரியும் நமது அரசு டாக்டர்களுக்கு இப்படி ஒரு வாய்ப்பு அளிப்பதால், தமிழ்நாட்டிலேயே சிறந்த மருத்துவப் பணி செய்வார்கள். இந்த சிறப்பான வெற்றிக்கு மூலகாரணமான முதல்-அமைச்சருக்கு பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்