“எழுச்சியான வழியில் தேமுதிகவை கொண்டு செல்வேன்” - விஜய பிரபாகரன்

தேமுதிகவை எழுச்சியான வழியில் கொண்டு செல்வேன் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

Update: 2022-03-17 13:40 GMT
தூத்துக்குடி,

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன், இன்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் தமிழ்நாட்டிலேயே படிப்பை தொடர நீட் தேர்வு அவசியமா? இல்லையா? என்பதை திமுக மற்றும் பாஜக நிச்சயம் தெளிபடுத்த வேண்டும் என்று கூறினார்.

மேலும் வெற்றி, தோல்வி என்பது அனைவருக்கும் வரக்கூடியது தான் என்று குறிப்பிட்ட அவர், கேப்டன் விஜயகாந்த் உருவாக்கிய தேமுதிக கட்சியை வலுப்படுத்தி, எழுச்சியான வழியில் கொண்டு செல்வேன் என்று தெரிவித்தார். 

மேலும் செய்திகள்