தற்கொலை செய்துகொள்ள வேண்டாம் மாணவ-மாணவிகளுக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு வேண்டுகோள்
தற்கொலை செய்து கொள்ள கூடாது, உங்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது என்று மாணவ-மாணவிகளுக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை,
பள்ளிகள் திறந்து, வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. மாணவ-மாணவிகள் படிப்பில் அக்கறை செலுத்தி, வர இருக்கும் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற வேண்டிய நேரமிது. இந்த சூழ்நிலையில் விரும்பத்தகாத செய்திகள் நமக்கு வந்து கொண்டிருக்கின்றன.
சில மாணவர்கள் தற்கொலை செய்ய முயற்சி செய்து இருக்கிறார்கள். இன்னும் சிலர் தற்கொலை செய்துள்ளனர் என்ற சோகமான செய்தி வருகிறது. இது நல்ல செய்தி அல்ல.
பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களாகிய நீங்கள் 18 வயதிற்கு உட்பட்டவர்களாக இருப்பீர்கள். இன்னும் 60 அல்லது 70 ஆண்டுகள் நீங்கள் வாழ்வதற்கு நேரம் இருக்கிறது. இந்த நேரம் உங்களுடைய சொத்து.
பாடத்தில் குறைந்த மதிப்பெண் எடுத்துவிட்டோம். வகுப்பு தலைவராக உங்களை நியமிக்கவில்லை என்பன போன்ற சிறு, சிறு காரணங்களுக்காக உங்கள் உயிரை மாய்த்துக்கொள்வது மிகத்தவறான முடிவாகும். நீங்கள் இந்த நாட்டின் சொத்து. தற்கொலை செய்து கொள்வது என்பது சமுதாயத்துக்கு எதிரான குற்றமாகும்.
நல்ல எதிர்காலம்
மாணவர்களாகிய உங்களுக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது. நீங்கள் எதிர்காலத்தில் ஒரு நாட்டின் முதல்-அமைச்சராகவோ, ஒரு விஞ்ஞானியாகவோ, காவல்துறையின் தலைமை பொறுப்பிலோ வருவதற்கு உங்களுக்கு எவ்வளவோ வாய்ப்புகள் காத்திருக்கிறது.
உங்களது பெற்றோர்களின் எதிர்காலமும் உங்கள் கையில் இருக்கிறது. நீங்கள் திடீரென்று தற்கொலை செய்து கொண்டால், உங்கள் பெற்றோர் படும் சிரமத்தை நினைத்து பார்க்க வேண்டும்.
உங்களுக்கு தற்கொலை செய்யும் மனநிலை உருவானால், அருகில் உள்ள மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்களிடத்தில் போனில் பேசி ஆலோசனை பெறலாம். அது மட்டுமில்லாமல், 1098 என்ற உதவி மையத்தை தொடர்பு கொண்டு பேசினால், அங்கும் உங்களுக்கு அறிவுரைகள், ஆலோசனைகளை வழங்குவார்கள். அல்லது தற்கொலை தடுப்பு மையத்தின் உதவி எண்ணான 9152987821 என்ற எண்ணையும் தொடர்பு கொண்டு பேசி உரிய ஆலோசனைகளை பெறலாம்.
உற்சாகமாக இருங்கள்
மாணவ-மாணவிகளே உற்சாகமாக இருங்கள். வரப்போகும் தேர்வுகளுக்கு உங்களை தயார்படுத்தி கொள்ளுங்கள். உங்களுக்கு படிப்பே சுகமானதாக இருக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.