மரவள்ளி சாகுபடியாளர்களுக்கு ஊக்கத்தொகை வேளாண்துறை தகவல்

மரவள்ளி சாகுபடியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. வேளாண்துறை தகவல்

Update: 2022-03-16 13:36 GMT
புதுச்சேரி
புதுவை கூடுதல் வேளாண் இயக்குனர் (தோட்டக்கலை) சிவராமன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி அரசின் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை, மரவள்ளி சாகுபடியாளர்களுக்கு உற்பத்தி ஊக்கத்தொகையாக ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் வழங்க திட்டமிடப்பட்டு, விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
வயல் ஆய்வு செய்தபின் மரவள்ளி சாகுபடி செய்த விவசாயிகளின் பெயர் பட்டியல், சமுதாய தணிக்கை செய்வதற்காக புதுவையில் உள்ள சம்பந்தப்பட்ட உழவர் உதவியகங்களின் அறிவிப்பு பலகையில் வருகிற 25-ந்தேதிவரை பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும். மேலும் புதுச்சேரி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையதளத்திலும் (https://agri.py.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.
இப்பட்டியலில் ஏதேனும் ஆட்சேபனை இருப்பின் வருகிற 25-ந்தேதிக்குள் புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் உள்ள வேளாண் கூடுதல் இயக்குனர் (தோட்டக்கலை) அலுவலகத்தில் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்