நெல்லை: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்-வீடு புகுந்து அடித்த உறவினர்கள்...!

திசையன்விளை அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை வீடு புகுந்து அடித்த உறவினர்கள்.

Update: 2022-03-16 09:45 GMT
திசையன்விளை,

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அய்ய நேரியை சேர்ந்தவர் முத்தையா (வயது 43).  இவர் திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் 6 ஆண்டுகளாக ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் அதே பள்ளியில் பயின்று வந்த  9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகின்றது.

முத்தையாவால் பாலியல் தொல்லைக்கு உள்ளான மாணவி, இது குறித்து பெற்றோரிடம் கூறி உள்ளார்.  இதை கேட்டு ஆத்திரம் அடைந்த  மாணவியின் உறவினர்கள் நேற்று இரவு ஆசிரியர் முத்தையா வீட்டுக்கு சென்று அவரை சரமாரி அடித்து உதைத்து உள்ளனர்.  இதில் காயம் அடைந்த அவர் திசையன்விளையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.  தகவல் அறிந்து மருத்துவமனைக்கு சென்ற திசையன்விளை போலீசார் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

மேலும் செய்திகள்