தனியார் நிறுவன மேலாளர் தூக்குப்போட்டு தற்கொலை

மன உளைச்சலுக்கு ஆனான தனியார் நிறுவன மேலாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்

Update: 2022-03-15 13:16 GMT
புதுச்சேரி
புதுவை முத்தியால்பேட்டை சூரியகாந்தி நகரை சேர்ந்தவர் முத்துக்குமரன் (வயது 41). தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த ஆண்டு கொரோனா பாதித்தது முதல் அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். 
இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆனான அவர், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொழிலாளி  தற்கொலை

புதுவை முத்தியால்பேட்டை அக்காசாமி மடம் வீதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் மணிகண்டன் (வயது 30). தச்சுத்தொழிலாளி. இவருக்கு மனநிலை பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் மதுவுக்கும் அடிமையாகி உள்ளார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர், விஷ மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்