தமிழக கவர்னரை உடனடியாக மாற்றவேண்டும்: மக்களவையில் திமுக எம்.பி.க்கள் முழக்கம்

தமிழக கவர்னரை உடனடியாக மாற்றவேண்டும் என்று மக்களவையில் திமுக எம்.பி.க்கள் முழக்கமிட்டனர்.

Update: 2022-03-15 07:41 GMT
கோப்புப்படம்
புதுடெல்லி,

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை கவர்னர் ஆர்.என்.ரவி மீண்டும் அரசுக்கே திருப்பி அனுப்பினார். 

இதனால் தமிழக கவர்னரை நீக்கவேண்டும் என்று தமிழக எம்.பி.க்களும். எம்.எல்.ஏ.க்களும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை உடனடியாக மாற்றவேண்டும் என்று மக்களவையில் திமுக எம்.பி.க்கள் டி.ஆர் பாலு உள்ளிட்டோர் முழக்கமிட்டனர். 

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, சட்டத்தை மதிக்காமல் செயல்படுகிறார் என்றும்,  நீட் விலக்கு மசோதா உட்பட 7 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்துள்ளதாகவும் திமுக எம்.பி., டி.ஆர்.பாலு மக்களவையில் குற்றம் சாட்டினார். அவர் கூட்டாட்சி நடத்துகிறாரா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். 

மேலும் செய்திகள்