தமிழக கவர்னருடன் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என். ரவியை சந்தித்தார்.
சென்னை,
சென்னை கிண்டியில் தமிழக கவர்னருடன் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பியுள்ள நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
வரும் 18 ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், கவர்னர்-முதல் அமைச்சர் இடையிலான சந்திப்பு நடைபெறுகிறது. மேலும், கொரோனா பாதிப்பு உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கவர்னரை முதல் அமைச்சர் சந்தித்துவரும் அதே வேளையில், தமிழக கவர்னரை உடனடியாக நீக்கவேண்டும் என்று மக்களவையில் திமுக எம்.பி.க்கள் டி.ஆர் பாலு உள்ளிட்டோர் முழக்கமிட்டு வருகின்றனர்.