எஸ்.பி. வேலுமணி வீடு உள்பட 58 இடங்களில் மீண்டும் சோதனை
எஸ்.பி. வேலுமணி வீடு உள்பட 58 இடங்களில் லஞ்ச ஒழிப்பத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவை,
கடந்த அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி. வேலுமணி. தற்போது கோவை தொண்டாமுத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் அதிமுக சட்டப் பேரவை கொறடாவாகவும் உள்ளார்.
இந்த நிலையில், இவருக்குச் சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வருமானத்தை விட கூடுதலாக 58.23 கோடிக்கு சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பத் துறையினர் வழக்குப் பதிவு செய்த நிலையில், எஸ்.பி. வேலுமணி வீடு உள்பட 58 இடங்களில் இன்று காலை சோதனை நடத்தி வருகிறார்கள்.
மேலும், அவருக்கு தொடர்புடையவர்களிடமும் சோதனை நடைபெற்று வருகிறது. சேலம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள பிரபல நகைக்கடையிலும் கரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு நடராஜன் தலைமையில் சோதனை நடத்தப்பட்டு வரப்படுகிறது அதேபோன்று சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் மேட்டூரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்
மைல்கல் பகுதியில் உள்ள எஸ்.பி. வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தியபோது, அப்பகுதியில் அதிமுக தொண்டர்கள் பெருமளவில் திரண்டதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.