திருப்பூர்: தேர்வில் பிட் அடித்ததை கண்டித்ததால் பள்ளி மாணவன் தற்கொலை..!

உடுமலை அருகே உள்ள அருகே தேர்வின் போது பிட் அடித்ததை ஆசிரியர் கண்டித்ததால் பிளஸ்-1 மாணவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2022-03-15 05:30 GMT
திருப்பூர்,

உடுமலை கனியூரில் அரசு உதவிபெறும் தனியார் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வரும் கலைச்செல்வன் (16) என்ற மாணவர் நேற்று வகுப்பு தேர்வின்போது பிட் அடித்ததாகவும் இதனை ஆசிரியர் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. 

இதையடுத்து மாணவன் பள்ளியில் முதல் தளத்திற்கு சென்று அங்கிருந்து குதித்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் கிடந்த மாணவரை சக மாணவர்களும் ஆசிரியர்களும் உடனடியாக மீட்டு மடத்துக்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் கணியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்