ஆண்டிபட்டியில் பயங்கர தீ விபத்து; ரூ. 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்...!

ஆண்டிபட்டியில் ரப்பர் குழாய்கள் மீது பற்றிய தீயால் ரூ. 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளது.

Update: 2022-03-14 16:15 GMT
தேனி,

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் குடிநீர் குழாய்கள் பதிக்கும் திட்டம் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக அந்த பகுதியில் ரப்பர் குழாய்களை குவித்து வைத்திருந்தனர்.

இந்த நிலையில் இந்த குழாய்கள் இருந்த இடத்தில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. பின்னர் ரப்பர் குழாய்கள் மீது பற்றிய தீ மளமளவென கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. 

இதனை அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர், ரப்பர் குழாகளில் எரிந்த தீணை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த தீ விபத்தால் ஆண்டிபட்டி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

இந்த தீ விபத்தால் சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகி உள்ளது. 

இது தொடர்பாக வழக்குப்பதிவு  செய்த போலீசார், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்