பிறந்த நாளுக்கு அண்ணன் வராததால் விரக்தி 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை
தனது பிறந்த நாளுக்கு அண்ணன் வராததால் விரக்தி அடைந்த 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆலந்தூர்,
சென்னையை அடுத்த பெரும்பாக்கம் இந்திரா காந்தி தெருவை சேர்ந்தவர் உதயகுமாரி (வயது 16). இவர், சித்தாலப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் உதயகுமாரிக்கு பிறந்தநாள் என்பதால் திருவண்ணாமலையில் உள்ள தனது அண்ணன் சந்திரன் வந்தவுடன் தம்பிகளுடன் சேர்த்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட முடிவு செய்தார். வழக்கம்போல் அவருடைய தாய், தந்தை இருவரும் வேலைக்கு சென்று விட்டனர்.
தூக்குப்போட்டு தற்கொலை
பிறந்த நாளுக்காக எடுத்த புத்தாடையை அணிந்து கொண்டு தனது அண்ணன் வருகைக்காக தம்பிகளுடன் காத்திருந்தார். ஆனால் மாலை வரை அவரது அண்ணன் வராததால் விரக்தியில் இருந்த உதயகுமாரி, வீட்டின் அறையில் நைலான் கயிறு மூலம் தூக்குப்போட்டு கொண்டார்.
இதையறிந்த அக்கம் பக்கத்தினர் மாணவியை கீழே இறக்கி, 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். 108 ஆம்புலன்சில் வந்த செவிலியர் பரிசோதித்து விட்டு மாணவி உதயகுமாரி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இது குறித்து பெரும்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனது பிறந்த நாளுக்கு அண்ணன் வராத விரக்தியில் மாணவி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என விசாரித்து வருகிறார்கள்.